Friday, June 8, 2012


பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது? 
பணி மாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மே மாதம் நடந்தது. இக்கல்வியாண்டில், பள்ளிகள் துவங்கிய நிலையில், கவுன்சிலிங் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாறுதல் கேட்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 9ம் தேதிக்குள், முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க ஆலோசனை தரப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. வழக்கமாக அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங் அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 5, 2012


பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.


* பள்ளிக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை 05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு  11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


* தொடக்கக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  பெற்று ஒப்படைக்க வேண்டும்.


கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


Saturday, June 2, 2012



அணு உலையை மூடு...சூரியனுக்கு ஜே போடு!


சூரிய சக்தியைப் பயன்படுத்தி 22 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, கடந்த வாரத்தில் சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனி. இது, வாரக் கடைசி நாட்களில் பாதி ஜெர்மனி பயன்படுத்தக்கூடிய மின்சார அளவாகும். ''20 அணு உலைகள் முழுநேரம் வேலை செய்தால் கிடைக்கக்கூடிய மின்சாரத்தின் அளவு இது'' என்று பெருமையோடு சொல்கிறது ஜெர்மனியின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை!

உலக அளவில் சூரிய சக்தியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வத்தோடு இயங்கிவரும் நாடுகளில் ஜெர்மனி முக்கியமான நாடு. ஜப்பானின் புகோஷிமா அணுஉலை பாதிப்புக்குப் பிறகு, அணு உலைகளுக்கு எதிராக ஜெர்மனியில் வெடித்த மக்கள் போராட்டங்களையடுத்து, 8 அணு உலைகளை மூடி விட்டது ஜெர்மனி. மீதமுள்ள 9 அணு உலைகளையும் 2022-ம் ஆண்டுக்குள் மூடிடத் தீர்மானித்திருக்கும் அந்த நாடு, 'நாட்டுக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் கூடிய விரைவில் சூரிய ஓளி, காற்றாலை, இயற்கை எரிவாயு மூலமே தயாரிப்போம்' என்றும் அறிவித்திருக்கிறது!