Saturday, July 7, 2012


பள்ளிகளில் சிறப்பு பாதுகாப்புப்படை

"மாணவர்களின் நலன் காக்க, சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி அறிவுறுத்தியுள்ளார்.

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிகளில் மாணவர்கள் நலன் பாதுகாக்க, உடற்கல்வி ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், சாரண மற்றும் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்கள் உள்ளடக்கிய சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேணடும்.

போலீஸ், போக்குவரத்து , தீயணைப்பு , சுகாதாரத்துறை மூலம், சிறப்பு பாதுகாப்பு படைக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களிடையே அச்ச உணர்வு நீக்க வேண்டும்.

இதை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி, பாதுகாப்பு படை அமைக்க வேண்டும். பாதுகாப்பு படை நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளா

தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு


 தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.


        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத தற்காலிக 4748 பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு

Friday, June 8, 2012


பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது? 
பணி மாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மே மாதம் நடந்தது. இக்கல்வியாண்டில், பள்ளிகள் துவங்கிய நிலையில், கவுன்சிலிங் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாறுதல் கேட்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 9ம் தேதிக்குள், முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க ஆலோசனை தரப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. வழக்கமாக அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங் அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 5, 2012


பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.


* பள்ளிக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை 05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு  11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


* தொடக்கக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  பெற்று ஒப்படைக்க வேண்டும்.


கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


Saturday, June 2, 2012



அணு உலையை மூடு...சூரியனுக்கு ஜே போடு!


சூரிய சக்தியைப் பயன்படுத்தி 22 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, கடந்த வாரத்தில் சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனி. இது, வாரக் கடைசி நாட்களில் பாதி ஜெர்மனி பயன்படுத்தக்கூடிய மின்சார அளவாகும். ''20 அணு உலைகள் முழுநேரம் வேலை செய்தால் கிடைக்கக்கூடிய மின்சாரத்தின் அளவு இது'' என்று பெருமையோடு சொல்கிறது ஜெர்மனியின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை!

உலக அளவில் சூரிய சக்தியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வத்தோடு இயங்கிவரும் நாடுகளில் ஜெர்மனி முக்கியமான நாடு. ஜப்பானின் புகோஷிமா அணுஉலை பாதிப்புக்குப் பிறகு, அணு உலைகளுக்கு எதிராக ஜெர்மனியில் வெடித்த மக்கள் போராட்டங்களையடுத்து, 8 அணு உலைகளை மூடி விட்டது ஜெர்மனி. மீதமுள்ள 9 அணு உலைகளையும் 2022-ம் ஆண்டுக்குள் மூடிடத் தீர்மானித்திருக்கும் அந்த நாடு, 'நாட்டுக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் கூடிய விரைவில் சூரிய ஓளி, காற்றாலை, இயற்கை எரிவாயு மூலமே தயாரிப்போம்' என்றும் அறிவித்திருக்கிறது!

Tuesday, May 29, 2012


பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்பு

கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம்:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு:ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,' என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

யார் எழுத வேண்டாம்?இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர்.அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை.இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

காரணம் என்ன?தேர்வை தள்ளி வைப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்த வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்:கேள்வித்தாள்கள் இன்னும் தயாராகவில்லை; அதேபோல், "ஹால் டிக்கெட்' தயாரிக்கும் பணிகளும் முடியவில்லை. இதற்கிடையே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டுள்ளனர்.இப்படிப்பட்ட விண்ணப்பங்களை அப்படியே ஏற்பது, பின்னாளில் பிரச்னை வரலாம். எனவே, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள், தவறுகளை சரி செய்யவும், விடுபட்ட இடங்களை நிரப்பவும், ஒரு வாய்ப்பு தரப்படும்.அதன்படி, விண்ணப்பதாரர், விண்ணப்ப எண்களை இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் உள்ள தவறுகள் அனைத்தும் தெரிய வரும். இதை சரி செய்த பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதுபோன்ற பணிகளுக்காகவும், தேர்வர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாகவும், ஒரு மாதம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்றே சொன்னது "தினமலர்!'"டி.இ.டி., தேர்வை தள்ளி வைப்பது குறித்து, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது' என்ற செய்தியை, ஏப்., 8ம் தேதி, முதல் பக்கத்தில், "தினமலர்' நாளிதழ் வெளியிட்டது. இதற்கிடையே, கடந்த 18ம் தேதி, "தேர்வு திட்டமிட்டபடி, ஜூன் 3ம் தேதி நடக்கும்; அதில், எவ்வித மாற்றமும் கிடையாது' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி பேட்டி அளித்தார். எனினும், தற்போது, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12ம் தேதி விடுமுறை:அரசு வேலை நாளில், டி.இ.டி., தேர்வு நடப்பதால், அதில் பணிபுரியும் ஆசிரியர் பங்கேற்க வசதியாக, அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும்; வேறொரு நாளில், பணி நாளாக அது ஈடு செய்யப்படும் என்றும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.