Tuesday, March 5, 2013

10ம் வகுப்பு தனி தேர்வு: 6,7ம் தேதிகளில்தத்கால் திட்டம் அறிவிப்பு


பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு:


அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வில் பங்கேற்க முடியும். பழைய பாடத்திட்டத்தில், அறிவியல் பாடத்தை தவிர, இதர பாடங்களில் தோல்வியுற்று இருந்தால், அந்த பாடங்களை மட்டும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம்.

தேர்வுக் கட்டணம், 125 ரூபாய், சிறப்புக் கட்டணம், 500 ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும். www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 5, 6ம் தேதிகளில், மாணவர் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை, 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்த பின், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய படிவத்தில் வழங்கப்படும், 10 இலக்க எண்களை, மாணவர், தவறாமல் குறித்து கொள்ள வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தியே, தேர்வு தொடர்பான எந்த ஒரு சந்தேகங்களுக்கும், முறையீடு செய்ய முடியும்.

பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், மாணவ, மாணவியர், தங்களின் புகைப்படத்தை ஒட்டி, அருகில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றொப்பம் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை, வரும் 18, 19ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் ஒப்படைத்து, ஹால் டிக்கெட் பெறலாம்.

இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Saturday, July 7, 2012


பள்ளிகளில் சிறப்பு பாதுகாப்புப்படை

"மாணவர்களின் நலன் காக்க, சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி அறிவுறுத்தியுள்ளார்.

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிகளில் மாணவர்கள் நலன் பாதுகாக்க, உடற்கல்வி ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், சாரண மற்றும் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்கள் உள்ளடக்கிய சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேணடும்.

போலீஸ், போக்குவரத்து , தீயணைப்பு , சுகாதாரத்துறை மூலம், சிறப்பு பாதுகாப்பு படைக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களிடையே அச்ச உணர்வு நீக்க வேண்டும்.

இதை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி, பாதுகாப்பு படை அமைக்க வேண்டும். பாதுகாப்பு படை நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளா

தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு


 தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.


        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத தற்காலிக 4748 பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு

Friday, June 8, 2012


பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது? 
பணி மாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மே மாதம் நடந்தது. இக்கல்வியாண்டில், பள்ளிகள் துவங்கிய நிலையில், கவுன்சிலிங் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாறுதல் கேட்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 9ம் தேதிக்குள், முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க ஆலோசனை தரப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. வழக்கமாக அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங் அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 5, 2012


பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.


* பள்ளிக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை 05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு  11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


* தொடக்கக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  பெற்று ஒப்படைக்க வேண்டும்.


கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்